தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வடிவேலு நம்பர்-ஒன் காமெடியனாக இருந்தபோதே சில படங்களில் அவருடன் நடித்து வந்தவர் சந்தானம். அதையடுத்து அவர் ஹீரோ வேடங்களில் நடிப்பதில் கவனத்தை திருப்பியபோது, சந்தானத்தின் காமெடி மார்க்கெட் சூடுபிடித்தது. சில ஹீரோக்கள் தங்களிடம் டைரக்டர்கள் கதை சொல்லி முடித்ததும், முதல்வேளையாக சந்தானத்திடம் கால்சீட் கேளுங்கள் என்று டைரக்டர்களை அனுப்பி விட்டனர். அந்த அளவுக்கு சந்தானத்தின் காமெடியை நம்பியே பல ஹீரோக்கள் இருந்தனர்.
ஆனால் சமீபகாலமாக அந்த சந்தானமும் ஹீரோவாகி விட்டார். அதனால், அவருக்கு அடுத்தபடியாக இருந்த காமெடியன் சூரி தற்போது முன்னணி காமெடியனாகி விட்டார். அந்தவகையில், பல படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரோபோ சங்கரின் காமெடி பெரிய அளவில் ஒர்க்அவுட்டானது. அவரது காமெடிக்காகவே அந்த படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு விசிட் அடித்தனர்.
விளைவு, இப்போது கோலிவுட்டின் டாப் காமெடியன் லிஸ்டில் ரோபோ சங்கரின் பெயரும் இடம்பிடித்து விட்டது. சூரி பிசியாக இருக்கிறார் என்றால் மட்டுமே மற்ற காமெடியன்கள் பக்கம் சென்ற தயாரிப்பாளர்கள், இப்போது நேரடியாகவே ரோபோ சங்கரை தேடிச்செல்கின்றனர். இதனால் சந்தானத்திற்கு பிறகு சரியான போட்டி காமெடியன் இல்லாமல் கம்பு சுற்றி வந்த சூரிக்கு சரியான போட்டியாள ராக ரோபோ சங்கர் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.