பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெரும் எதிர்பார்ப்புடன், கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த டில்லி அழகி சுரபிக்கு, ஏமாற்றமே கிடைத்தது. இவன் வேற மாதிரி படத்துக்கு அடுத்ததாக, இவர் நடித்த வேலையில்லாத பட்டதாரியில், சிறிய வேடம் தான் கிடைத்தது. ஆனாலும், புகழ் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதற்கு பின்னும், கோலிவுட்டின் இரும்பு கதவு, சுரபிக்காக அகல திறக்கவில்லை. வேறு வழியின்றி, தெலுங்கிற்கு சென்றார். அட்டாக், ஜென்டில்மேன் ஆகிய படங்களின் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கும், அவருக்கு வரவேற்பு இல்லை. இப்போது, சுரபியின் கைகளில் சுத்தமாக ஒரு படம் கூட இல்லை. அவரை தேடி வரும் வாய்ப்புகளும், சிறிய வேடங்களாக இருப்பதால், 'அவசரப்பட்டு, சினிமாவில் கால் வைத்து விட்டோமோ' என, யோசிக்க துவங்கியுள்ளார். 'டிவி' சீரியல்களில் நடிக்கலாமா என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறதாம்.