ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் சின்னத்திரை நடிகராக இருந்து வந்த சரத் கேல்கெர், பின்னர் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். ராம்லீலா, ஹீரோ, ராக்கி ஹேண்ட்சம் போன்ற படங்களில் நடித்தவர், தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‛சர்தார் கபார் சிங்' படத்தில் அவருடன் முக்கிய ரோலில் நடித்தார். இதனால் இப்போது அவருக்கு தெலுங்கிலும் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி பவன் கல்யாண் உடனும் நெருக்கமாகியிருக்கிறார். இதனால் பவனின் அடுத்தப்படத்திலும் சரத் கேல்கெர் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார். இதுதவிர மேலும் சில தெலுங்கு பட வாய்ப்புகளும் அவருக்கு வருவதால் இப்போது தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். இதை தக்க வைத்து கொள்ளும் விதமாக தெலுங்கு மொழியை கற்க தொடங்கியிருக்கிறார் சரத் கேல்கெர். பாலிவுட்டை போன்று இனி தெலுங்கிலும் சரத்தை அதிக படங்களில் காணலாம்.