ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கபாலி' படம் பற்றி பத்திரிகைகள் பலவும் பல்வேறு விதமான செய்திகளை வெளியிடுகின்றன. அவர்களுக்குப் போட்டியாக பரபரப்புக்காக சில தொலைக்காட்சிகளும் உண்மையில்லாத சில செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அப்படி வரும் பொய்யான செய்திகள் மூலம் சில தேவையற்ற பிரச்னைகளும், விவாதங்களும் ஏற்படுகின்றன. அதுவும் இந்த சமூக வலைத்தளக் காலத்தில் ஒரு படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வருவதற்கு முன்பே ரசிகர்கள் டிசைன் செய்யும் சில போஸ்டர்கள் வெளிவந்து விடுகின்றன. அவற்றைத் தடுக்கவும் முடியாது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் புரிந்து கொள்ளாமல் சிலர் செய்திகளை வெளியிடுகின்றனர்.
வடஇந்திய ஊடகம் ஒன்று நேற்று 'கபாலி' படத்தின் போஸ்டர் பற்றி இந்தி நடிகர் இர்பான் கூறியதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதாவது, ஒரு ரசிகர் டிசைன் செய்த 'கபாலி' படத்தின் போஸ்டரை, ஒரிஜனல் போஸ்டர் என நினைத்து இர்பான் அவர் நடித்துள்ள படமான 'மதாரி' பட போஸ்டரை 'கபாலி' குழுவினர் காப்பியடித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அது ரசிகர் டிசைன் செய்த போஸ்டர் என இர்பானுக்கும் தெரியவில்லை, செய்தி வெளியிட்ட ஊடகத்திற்கும் தெரியவில்லை.
இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் அந்த நிறுவனத்திடம் 'உண்மையான செய்திகளை சரியாக வெளியிடுங்கள்' என டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.