குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கிய பட்டாஸ் திரைப்படம் கல்யாண் ராம் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் வசூலையும் வாரிக் குவித்த பட்டாஸ் திரைப்படத்தை கல்யாண் ராம் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்தார். இந்நிலையில் மீண்டும் அனில் ரவிபுடி இயக்கத்தில் கல்யாண் ராம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சாய் தரன் தேஜ் நடிப்பில் சுப்ரீம் படத்தை இயக்கிய அனில் ரவிபுடி அடுத்து இயக்கவிருக்கும் படத்தை கல்யாண் ராம் தயாரித்து நடிக்கவுள்ளாராம். தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்து வரும் கல்யாண் ராம் அப்படத்தை முடித்த பின்னர் அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.