பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து சுமார் நான்கு மாதங்களாகி விட்டது. அவரது மரணம் இயற்கையானது அல்ல என தெள்ளத்தெளிவாக தெரிந்தாலும், அதற்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க கலாபவன் மணி இறப்பதற்கு முன் அவர் நடித்து முடித்த படங்கள் கடந்த மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாகின. கலாபவன் மணி நடிக்க ஒப்புக்கொண்ட இன்னும் ஒன்றிரண்டு படங்கள் அப்படியே முடங்கிப்போயின..
ஆனால் அவற்றில் 'டபேதார்' என்கிற படத்தை மட்டும் நட்சத்திரங்களை மாற்றி படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இந்தப்படத்தில் கலாபவன் மணியும் அனன்யாவும் நடிப்பதாக திட்டமிடப்பட்டு 2014ல் நடைபெற்ற அந்தப்படத்தின் பூஜையில் எல்லாம் கலாபவன் மணி கலந்துகொண்டார். இப்போது கலாபவன் மணி இறந்துவிட்டதால் டினி டாம் என்பவரை கதாநாயகன் ஆக்கியுள்ளார்கள்.. அதேபோல அனன்யாவையும் மாற்றிவிட்டு மாளவிகா என்பவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஜான்சன் எஸ்தப்பன் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.. நேற்று கலாபவன் மணிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.