ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு 'கபாலி' பட போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வெளியாகியிருந்தது. இந்த போஸ்டர் இந்தியில் இர்பான் நடித்து வரும் 'மதாரி' படத்தின் போஸ்டரின் டிசைன் ஆகும். இர்பான் நடித்து வரும் 'மதாரி' படம் ஜூலை 15ந் தேதி வெளிவருகிறது. இதே நாளில்தான் கபாலியும் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.
கட்டிடங்களுக்கு இடையே இர்பான் முகம் தெரிவது போன்று 'மதாரி' போஸ்டர் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. தற்போது அதே மாதிரி ரஜினி முகம் தெரிவது போன்று 'கபாலி' போஸ்டர் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து தனது டுவிட்டரில் எழுதியுள்ள இர்பான் மும்பை பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் “நாங்கள் சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள். ரஜினிகாந்த் படக்குழுவினர் எங்கள் டிசைனை திருடி போஸ்டர் வெளியிட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ரஜினி ரசிகர்கள் தங்கள் இணைய தளதில் “கபாலி பட அறிவிப்பில் இருந்தே ரஜினி ரசிகர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப கபாலி படத்தின் டிசைன்கள், போஸ்டர்களை அவர்களே உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் இர்பான் கூறியிருக்கும் டிசைன். அது கபாலி படக்குழுவால் உருவாக்கப்பட்டதல்ல” என்று தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.