தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தில் படங்களின் வெற்றி விழாக்களைப் பார்த்து எவ்வளவோ நாட்களாகிவிட்டது. முன்பெல்லாம் 100 நாட்கள் ஓடிய படங்களுக்கு பிரம்மாண்டமாக விழா கொண்டாடுவார்கள். ஆனால், அந்த 100 நாள் என்பதெல்லாம் தற்போது போய்விட்டது. 50 நாட்களைக் கடந்தாலே பெரிய விஷயமாக உள்ளது. ஒரு சில படங்கள் மட்டுமே 50 நாட்களைக் கடக்கின்றன. நாட்களை விட தற்போது வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கைதான் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
தமிழில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. முதல் வாரம் பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்த படம் அதன் பின் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டால் வெற்றிகரமாக வசூல் செய்ய ஆரம்பித்தது. வெறும் 50 லட்ச ரூபாய்க்கு மட்டுமே தெலுங்கு உரிமை வாங்கப்பட்ட படம் இதுவரை சுமார் 18 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். அது 20 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். விரைவில் 50வது நாளைக் கடக்க உள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கில் பிரம்மாண்டமான விழா நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
தமிழில் உள்ள மற்ற முன்னணி நடிகர்களை விட விஜய் ஆண்டனிக்கு தற்போது தெலுங்கில் தனி மார்க்கெட் உருவாகியுள்ளதாம். அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' படத்தை இப்போதே தெலுங்கு உரிமை கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.