ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஜெய்ஹிந்த்-2 படத்தைத் தொடர்ந்து அர்ஜூன் நடிப்பில் திரைக்கு வரும் படம் ஒரு மெல்லிய கோடு. இந்த படத்தில் அவருடன் ஷாமும் நடித்துள்ளார். ஏற்கனவே அர்ஜூன் நடித்த வனயுத்தம் படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ள இந்த படம் கன்னடத்தில் கடந்த பிப்ரவரி மாதமே ரிலீசாகி விட்டது. ஆனால் தமிழில் ஜூலை 1-ந்தேதி திரைக்கு வருகிறது. மேலும், இதே நாளில் சத்யராஜ்-சிபிராஜின் ஜாக்சன் துரை, சமுத்திரகனியின் அப்பா மற்றும் ஒன்பதிலிருந்து பத்து வரை, வில்லாதி வில்லன் வீரப்பன் உள்பட பல படங்கள் வருகின்றன.
இதில் சத்யராஜின் ஜாக்சன் துரை மற்றும் சமுத்திரகனியின் அப்பா படங்கள் எதிர்பார்க்கப்படும் படங்களாக இருந்தபோதும், ஒரு மெல்லிய கோடு படம் கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறாராம் அர்ஜூன். மேலும், முதல்வன் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்த மனீஷா கொய்ராலா இந்த படத்தில் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.