தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எனக்குப் போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று மேடைக்கு மேடை சொல்லி வந்தவர்தான் பவர்ஸ்டார். அதோடு ஐஸ்வர்யாராயுடன் டூயட் பாட வேண்டும் என்பதுதான் எனது லட்சியமே என்றும் கூறி வந்தார். ஆனால் அவர் ஒரு காமெடியன் என்பதால் யாருமே அவர் சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சமீபத்தில் நயன்தாரா, அனுஷ்காவுடன் ஜோடி சேருவதுதான் எனது லட்சியமே என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதைக் கேட்டு அவருக்கு நன்கு பரிட்சயமான சந்தானம், மிர்ச்சி சிவா உள்ளிட்ட சில ஹீரோக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.
ஆனால் அவர்கள் அதோடு விடவில்லையாம். பவர்ஸ்டாருக்கு போன் போட்டு, செமத்தையாக கலாய்த்து விட்டார்களாம். இவர்களில் மிர்ச்சி சிவா தனக்கு பவர்ஸ்டாரின் ஞாபகம் வரும்போதெல்லாம் போன் செய்து கலாய்க்கிறாராம். அப்போது, பெரிய பெரிய விசயங்களைகூட சாதாரணமாக பேசுகிறீர்களே. இதையெல்லாம் நீங்கள் தெரிந்துதான் பேசுகிறீர்களா இல்லை தெரியாமல் பேசுகிறீர்களா? என்று வேறு அவரை கேட்கிறாராம். இப்படி அவர் குறுக்க மறுக்க கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதால் இப்போது அவர் போன் செய்தாலே தெறித்து ஓடுகிறாராம் பவர்ஸ்டார்.