'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புலி, வேதாளம் படங்களுக்குப்பிறகு ராக்கி ஹேட்சம் என்ற இந்தி படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சூர்யாவுடன் எஸ்-3 படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், தனது அப்பா கமல் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் கமலின் மகளாகவே நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன். அவர்கள் சம்பந்தப்பட்ட செண்டிமென்ட் காட்சிகளும் படத்தில் அதிக மாக இடம்பெற்றுள்ளதாம்.
அதேசமயம் கமர்சியல் ஏரியாவில் தனது மற்ற படங்களைப்போலவே இந்த படத்திலும் புகுந்து விளையாடி வருகிறாராம் ஸ்ருதிஹாசன். அதாவது, தனக்கான லவ் ட்ராக்கில் சமீபகாலமாக கவர்ச்சியில் அடக்கி வாசித்து வந்த ஸ்ருதி, இப்படம் மூன்று மொழிகளில் தயாராவதால் மூன்று மொழி ரசிகர்களையும் கருத்தில் கொண்டு கவர்ச்சி ஏரியாவில் கலக்கி எடுத்து வருகிறாராம். நடிப்பு விசயத்தில் ஸ்ருதிக்கு முழுசுதந்திரம் கொடுத்து வரும் கமல், இந்த படத்திலும் அவர் விசயத்தில் தலையிடாமல் முழு சுதந்திரம் கொடுத்து விட்டாராம்.