ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த ரெஜினாவுக்கு சரியான வெற்றிகள் அமையாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே சென்று விட்டார். அதோடு, கிளாமர் கதைகளை தவிர்த்து வந்த அவர், ஒருகட்டத்தில் கிளாமர் குயினாகவும் களமிறங்கியதால் இப்போது ஆந்திராவில் பேசப்படும் நாயகியாகி விட்டார் ரெஜினா. அதோடு தமிலும் அவரது மார்க்கெட் சூடுபிடித்திருக்கிறது. தற்போது அவர் கைவசம் ராஜதந்திரம்-2, நெஞ்சம் மறப்பதில்லை, மாநகரம், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்கள் உள்ளன.
இதில் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பேய் வேடத்தில் நடித்துள்ள ரெஜினா, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் காமெடி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் முதலில் மெட்ராஸ் கலையரசன்தான் நாயகனாக கமிட்டாகியிருந்தார். ஆனால் அவர் நடித்த டார்லிங்-2, ராஜாமந்திரிபோன்ற படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட் அடிக்காததால் அவருக்குப்பதிலாக இப்போது அதர்வா அந்த படத்தில் நாயகனாகியிருக்கிறார். இதில், அதர்வா ஜெமினிகணேசனாகவும், சூரி சுருளிராஜனாகவும் செம கலக்கு கலக்கப்போகிறார்களாம்.