தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்திற்காக இதுவரை நான்கு டீசர்கள் யு டியூபில் வெளியிடப்பட்டுள்ளன. முதலில் தமிழில் டீசரை வெளியிட்டார்கள். அடுத்து தெலுங்கு டீசரை வெளியிட்டார்கள். இரண்டு டீசர்களுமே அந்தந்த மொழிகளில் புதுப் புது சாதனைகளைப் படைத்தது. அதன் பின் 'கபாலி' படத்தில் இடம் பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான 'நெருப்புடா' பாடலின் டீசரை வெளியிட்டார்கள். அந்த டீசரும் மற்ற டீசர்களைப் போலவே சாதனை படைத்து வருகிறது. இதுவரை அந்த டீசரை 66 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்திருக்கிறார்கள்.
தமிழ் டீசரை இதுவரை 2 கோடியே 35 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும், தெலுங்கு டீசரை 42 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும், ஹிந்தி டீசரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் பார்த்திருக்கிறார்கள். இவற்றோடு 'நெருப்புடா' டீசரையும் சேர்த்தால் கபாலி டீசரை இதுவரை 3 கோடியே 53 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதாவது 35 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். இந்தியத் திரையுலகில் வேறு எந்த ஒரு திரைப்படத்திற்கும் கிடைக்காத ஒரு அரிய சாதனை இது.
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்ல இந்தியத் திரையுகத்திலும் ரஜினியின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை 'கபாலி' டீசரை வைத்தே கணக்கிட்டுக் கொள்ளலாம்.