தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா, அக்ஷரா பட் நடிப்பில் சயனைடு பட இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கிய கன்னடப் படம் - கேம். இந்தப் படத்தை தமிழில் 'ஒரு மெல்லிய கோடு' என்ற பெயரில் டப் செய்தனர். கேம் படம் பிப்ரவரி மாதம் வெளியாகி தோல்வியடைந்தது. அதனால் ஒரு மெல்லிய கோடு படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல்போனது. ஏற்கெனவே ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, எதிர்பாராத சில பிரச்சனைகளால் அந்த தேதியில் இப்படம் ரிலீசாகவில்லை. இப்போது பிரச்சனைகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்ட நிலையில் 'ஒரு மெல்லிய கோடு' ஜூலை 1-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.
இதே தினத்தில்தான் சிபிராஜின் 'ஜாக்சன் துரை' படமும், சமுத்திரக்கனியின் 'அப்பா' படமும் வெளியாகின்றன. இவை தவிர, ராம்கோபால் வர்மா இயக்கிய 'வில்லாதி வீரன் வீரப்பன்' என்ற கன்னட டப்பிங் படமும் வெளியாகவிருக்கிறது. இதனால் ஒரு மெல்லிய கோடு படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.