இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'கபாலி' படத்தின் டீசரைப் பார்த்ததும் படத்தில் ரஜினிகாந்த் அதிகமாக வயதான தோற்றத்தில்தான் வருகிறார் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த டீசரில் ஒரு சில வினாடிகள் மட்டுமே தோன்றும் அந்த இளமைக் கால ரஜினி அனைவரையும் கவர்ந்துவிட்டார். படத்தில் வயதான தோற்றத்தில் ரஜினிகாந்த் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே தான் வருகிறாராம். மீதி நேரங்களில் 1980ல் ரஜினிகாந்த் எப்படியிருந்தாரோ அதே போன்று இளமையான தோற்றத்தில் வருவாராம். அதற்கான தோற்ற மாதிரிகளை 1980ல் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படங்களைப் பார்த்து உருவாக்கியிருக்கிறார்கள்.
'கபாலி' படத்தின் தெலுங்கு இசை வெளியீடு சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.
'கபாலி' என்ற பெரைச் சொன்னாலே அது ஒரு ரவுடியின் பெயரைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆனால், என்னுடைய படத்தில் கபாலி என்ற பெயரை நல்ல பெயராக மனதில் பதியும்படி பயன்படுத்தி இருக்கிறேன். மலேசியாவில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களையும், அவர்களை அந்தக் கஷ்டத்திலிருந்து ரஜினி சார் எப்படி காப்பாற்றுகிறார் என்பதும் தான் படத்தின் கதை. அந்த மக்களின் நலனுக்காக சாதாரண மனிதரான அவர் 'டான்' ஆக மாறுகிறார் என்பதை விறுவிறுப்புடன் கொடுத்திருக்கிறோம். படத்தில் ரஜினி சார் மலேசிய குடிமகனாக நடித்துள்ளார்.
'முள்ளும் மலரும்' படம்தான் இதுவரை ரஜினி சார் நடித்த படங்களிலேயே அவருடைய நடிப்பைப் பற்றி அதிகம் பேசப்பட்ட படம். ஆனால், 'கபாலி' படத்தில் அவர் நடித்துள்ள விதம் அந்தப் படத்தையும் மிஞ்சும் விதத்தில் இருக்கும்,” என்கிறார் பா.ரஞ்சித்.