வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். தற்போது நயன்தாராவுடன் ‛இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். விக்ரமிற்கு சைலஜா என்ற மனைவியும், அக்ஷிதா என்ற மகளும், துருவ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மகள் அக்ஷிதாவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார் நடிகர் விக்ரம்.
விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், கேவின் கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித் திருமண நிச்சயதார்த்தம் ஜுலை மாதம் 10ஆம் தேதி நடக்கிறது.
அக்ஷிதா - மனு ரஞ்சித் திருமணத்தை இருவீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையிலுள்ள ஸ்டார் ஓட்டலில் வருகிற ஜுலை 10ஆம் தேதி சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த திருமண நிச்சயத்திற்கு இருவீட்டாரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
அக்ஷிதாவை திருமணம் செய்ய இருக்கும் மனு ரஞ்சித், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகளின் மகன் ஆவார். அதாவது கருணாநிதியின் பேத்தியின் மகன் ஆவார். இதன்மூலம் நடிகர் விக்ரம், கருணாநிதியின் குடும்பத்தில் சம்பந்தம் செய்யவுள்ளார்.
ஜூலையில் நிச்சயதார்த்தம் நடந்தாலும் அடுத்தாண்டு தான் திருமணத்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.