இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் தில்லு முல்லு படத்தில் நடித்தவர் நடிகை இஷா தல்வார். தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளில் நடித்தார். இப்போது, பாலிவுட்டில் களமிறங்கியிருக்கிறார். அக்ஷ்த் வர்மா இயக்கும் கலா கான்டி படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சைப் அலிகான் முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார். ஆனால் இஷா தல்வார், சைப்பிற்கு ஜோடியாக நடிக்கவில்லை. சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது. காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படம் மூன்று விதமான கதைகளில் உருவாக இருக்கிறது. குறிப்பாக இப்பம் மும்பையில் இரவு நேரங்களை மையமாக வைத்து உருவாக உள்ளது.