அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். நடிகர் சங்க கட்டடத்தை கட்டிய பிறகு தான், தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற தீர்க்கமான முடிவில் இருக்கிறார். அதேசமயம் விஷாலும் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலெட்சுமியுடன் நெருக்கமாக இருப்பதும், இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவதும் தொடர்ந்து செய்தி வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமல்ல இருவரும் காதலிப்பதாக கூட ஒரு செய்தி உள்ளது. ஆனால் இதை இருவரும் உறுதியாக சொல்லவில்லை.
இந்நிலையில் நடிகர் விஷால், வரலட்சுமியுடன் இருப்பது போன்ற போட்டோ ஒன்றை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் இந்த போட்டோ எல்லாவற்றையும் சொல்லும் என்று பதிவை போட்டுவிட்டார். விஷாலின் இந்த பதிவால் இருவருக்கும் திருமணமா? என்று பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக நடிகர்கள் பலர் என்னப்பா அடுத்து திருமணமா என்கிற தொணியில் விஷாலிடம் கேட்க துவங்கிவிட்டனர்.
விஷாலின் இந்த பதிவால் விஷால் - வரலட்சுமி இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.