ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கவுதமி, விஷ்வந்த் உள்பட பலர் நடிக்கும் படம் நமது. மகேஷ் சங்கர் இசை அமைக்கிறார், ரகுல் ஸ்ரீவத்ஷவ் ஒளிப்பதிவு செய்கிறார். வர்ஷி சலன் சித்ரம் சார்பில் சாய் கொரப்பட்டி, ரஜினி கொரப்பட்டி தயாரிக்கிறார்கள். தெலுங்கில் 'மனமந்தா' என்ற பெயரிலும், தமிழில் 'நமது' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'விஷ்மயம்' என்ற பெயரிலும் தயாராகிறது.
இந்த படத்தில் 4 கதைகள் இடம்பெறுகிறது. படிப்பு டார்ச்சரில் இருந்து வெளியேறி சந்தோஷத்தை தேடும் ஒரு பள்ளி மாணவி, சமூக அந்தஸ்தை நாடும் ஒரு நடுத்தர குடும்பத் தலைவி. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மனசாட்சி உறுத்தலுடன் வாழும் சூப்பர் மார்க்கெட் மானேஜர், உயர துடிக்கும் ஒரு ஐ.டி கம்பெனி ஊழியர் இவர்களின் தனித்தனியான வாழ்க்கை கதைதான் படம். ஒரு புள்ளியில் இவர்கள் இணைவது கிளைமாக்ஸ். இதில் சூப்பர் மார்க்கெட் மானேஜராக மோகன்லாலும், நடுத்தர குடும்பத் தலைவியாக கவுதமியும் நடித்துள்ளனர். சந்திரசேகர் எல்லட்டி இயக்கி உள்ளார்.படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த மாதம் வெளிவருகிறது.