பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான துப்பாக்கி, ஹிந்தியில் அக்ஷ்ய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் ‛ஹாலிடே' என்ற பெயரில் ரீ-மேக்காகி அங்கும் வெற்றி பெற்றது. அதன்பிறகு விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த கத்தி படமும் வெற்றி பெற்றது.
இப்போது இப்படம் ஹிந்தியில் ரீ-மேக்காக இருக்கிறது. இதிலும் விஜய் ரோலில் அக்ஷ்ய் குமார் நடிக்க உள்ளார். ஜகன் ஷக்தி இயக்க உள்ளார். இப்படத்தில் அக்ஷ்ய் ஜோடியாக பாகிஸ்தான் நடிகை விஜே மாயாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருகின்றனர்.
தற்போது அக்ஷ்ய் ரஜினியின் 2.O மற்றும் ஜாலி எல்எல்பி-2 படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்த பின்னர் கத்தி ரீ-மேக்கில் நடிப்பார் என தெரிகிறது.