ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் காலத்தால் அழியாத பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் ஆர்டி பர்மன். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள ஆர்டி பர்மன், இசை குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆரம்பகாலத்தில் தனது அப்பாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றினார். ஆரம்பத்தில் ராஸ் உள்ளிட்ட படங்களில் ஒன்றிரண்டு பாடல்களுக்கு இசையமைத்தவர், 1961ம் ஆண்டு சோட்டே நவாப் என்ற படத்தில் சோலோ இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்போது ஆரம்பமான ஆர்டி பர்மனின் இசைப்பயணம் சுமார் 300 படங்கள் வரை தொடர்ந்தது. 1994-ம் ஆண்டு தனது 54வது வயதில் பர்மன் காலமானார்.
பர்மன் மறைந்தாலும் அவர் கொடுத்த சூப்பர் ஹிட் பாடல்கள் ஏராளம். 30 ஆண்டுகள் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த ஆர்டி பர்மனுக்கு இன்று(ஜூன் 27-ம் தேதி) 77-வது பிறந்தநாள். இதையொட்டி கூகுள் நிறுவனம் ஆர்டி பர்மனை பெருமைப்படுத்தியுள்ளது. அதாவது, கூகுள் டுடூல் பாரில் ஆர்டி பர்மனின் லிங்க்கை கொடுத்து கவுரவப்படுத்தியிருக்கிறது.