‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கமல்ஹாசன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு 20 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஆரம்பமானது. படப்பிடிப்புக்குச் சென்ற இடத்தில் படத்தை இயக்குவதாக இருந்த ராஜீவ் குமாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் கமல்ஹாசனே படத்தை இயக்க ஆரம்பித்தார். 20 நாட்களில் முதல் கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர். கடந்த வாரம்தான் இப்படத்தில் நடிப்பதற்காக ரம்யா கிருஷ்ணனும், பிரம்மானந்தமும் அமெரிக்கா சென்றனர்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி கமல்ஹாசன் படக் குழுவினருக்கு விருந்தளித்துள்ளார். அந்த விருந்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றும் அக்ஷராஹாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.