அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
ஏதாவது வித்தியாசமான கதைகளில், கெட்டப்புகளில் நடித்தால்தான் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதால், சாதாரணமான கதைகளில் நடித்து வந்த நடிகர் கள்கூட சமீபகாலமாக வித்தியாசம் காட்ட தொடங்கி விட்டனர். அதனால் விக்ரம் பாணியில் ஆளாளுக்கு உடல் எடையை அதிகப்படுத்தி, குறைத்து என நடித்து வருகிறார்கள். அந்த வகையில், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை கிட்டத்தட்ட 100 கிலோ வரை உயர்த்தி நடித்தார் அனுஷ்கா. அவரைத் தொடர்ந்து தற்போது கடம்பன படத்திற்காக 90 கிலோவுக்கு மேல் தனது உடல் எடையை அதிகப்படுத்தி காட்டுவாசியாக நடித்து வருகிறார் ஆர்யா.
இவர்களைத் தொடர்ந்து சிம்புவும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் வித்தியாசம் காட்டப்போகிறார். இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் அவர் ஒன்று வழக்கமான கெட்டப் என்றாலும், இன்னொரு வேடத்தில் வில்லன் தோற்றத்தில் நடிக்கிறார். ஆனால் இன்னொரு வேடத்தில் 100 கிலோ வரை உடல் எடையை அதிகப் படுத்தி நடிக்கப்போகிறாராம். அந்த வகையில். இந்த படத்தில் சிம்பு நடிக்கும் மூன்று வேடங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.