ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இரும்புக்குதிரை, சண்டி வீரன் படங்கள் அதர்வாவுக்கு பெரிதாக கைகொடுக்காதபோதும், ஈட்டி, கணிதன் படங்கள் வெற்றி பெற்றன. அதையடுத்து ருக்குமணி வண்டி வருது என்ற படத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்த படம் எப்போது ரிலீஸ் என்றே தெரியவில்லை. அதையடுத்து தனது சொந்த தயாரிப்பிலேயே தன்னை பாணா காத்தாடியில் அறிமுகம் செய்த பத்ரி இயக்கும் செம போதை ஆகாத படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இதற்கு முன்பு பெரிய அளவில் சமூக நோக்கம் உள்ள கதையில் நடிக்காத போதும் இந்த படத்தில் குடியால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் கதையில் நடிக்கிறார் அதர்வா. அதனால் இந்த படத்தில் அதிக ஆர்வத்துடன் நடித்து வரும் அதர்வா, இனிமேல இதுபோன்ற சமூக நோக்கமுள்ள கதைகளிலும் அவ்வப்போது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதோடு, தன்னிடம் பக்கா கமர்சியல் கதையை சொல்லும் டைரக்டர்களிடம், ஆங்காங்கே சின்னச்சின்ன சமூக நோக்கமுள்ள காட்சிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறாராம். அதர்வாவின் இந்த ஆர்வம் தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் டைரக்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாம்.