ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு வருடம் ஓடியும் கூட இன்னும் தாகம் அடங்கவில்லை போல 'பிரேமம்' பார்த்து ரசித்த கேரளா ரசிகர்களுக்கு.. அதனால் தான் புதிய படங்களுக்கே தியேட்டர்கள் சரியாக கிடைக்காத இந்த சூழலில் பிரேமம் படத்தை திரும்பவும் திரையிட கேரள சினிமா விநியோகஸ்தர்கள் முடிவு செய்தபோது பலரும் தங்களது தியேட்டர்களை தர முன்வந்தார்கள். இப்போது ஒரு சில தியேட்டர்களில் பிரேமம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.
கடந்த மே மாதம்-29ஆம் தேதி வெளியான இந்தப்படம் கேரளாவில் 150 நாட்களை தாண்டி ஓடியது கூட சாதனை அல்ல.. ஆனால் தமிழ்நாட்டில் ஒருவருடம் தொடர்ந்து ஓடியது பாருங்கள் அதுதான் மிகப்பெரிய சாதனை. அந்த சாதனைதான் இன்று நிவின்பாலியை தமிழில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைத்து தமிழ்நாட்டிலும் தன்னை நிலைநிறுத்த உதவி இருக்கிறது. இந்தப்படத்தில் கதாநாயகிகளாக அறிமுகமான சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் ஆகிய மூவரும் இப்போது பிசியான நடிகைகளாக மாறிவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.