வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மணிவண்ணன் இயக்கிய 'நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ', ஒரே ரெயிலில் படமாக்கப்பட்ட 'சிக்கிக்கு சிக்கிக்கிச்சு' படங்களில் நடித்தவர் மிருதுளா முரளி. தமிழில் சரியான வாய்ப்பு இல்லையென்றாலும் மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் 'ஆயாளு நானல்லா' என்ற படத்தில் திலீப்குமார் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். திக்மான்ஷு துளியா இயக்கும் ராஃக் தேஷ் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஹிந்தி சினிமாவில் பலத்தரப்பு மக்களின் பாராட்டுகளை பெற்ற பான் சிங் டோமர் மற்றும் சாஹேப், பீவி ஆர் கேங்ஸ்டர் படங்களை இயக்கியது திக்மான்ஷு என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகை சோனம் கப்பூரின் சகோதரர் மோஹித் மார்வா கதாநாயகனாக நடிக்கிறார். இந்திய ராணுவ விசாரணையை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் பிரபல நடிகர் குணல் கபூர் உட்பட பல பெரிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த மாத இறுதியில் படப்பிடிப்புடன் ஆரம்பமாகிறது.