'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை நடிகர் மற்றும் தொகுப்பாளரான விஷ்ணு நடிக்கும் படம் 'இவன் யாரென்று தெரிகிறதா'. இதில் அவருக்கு ஜோடியாக சதுரன் படத்தில் நடித்த வர்ஷா, சதுரங்கம் படத்தில் நடித்துள்ள இஷாரா நடித்துள்ளனர். சுசீந்திரன் உதவியாளர் எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்கி உள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். கோபிகிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓவ்ன் சினிமா புரொடக்ஷன் சார்பில் டி.அசோக்குமார் தயாரித்துள்ளார்.
நீண்ட நாள் தாரிப்பில் இருந்த இந்தப் படம் தற்போது இறுதி கட்டத்தை அடைந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விஷ்ணு நடித்த முதல் படமான 'இவனுக்கு தண்ணில கண்டம்' ஒரளவுக்கு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு. வருகிற 26ந் தேதி முதல் பாடல் மற்றும் டிரைலரை வெளியிடுகிறார்கள். அடுத்த மாதம் படத்தை வெளியிடுகிறார்கள்.