விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா |
கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் வைரமுத்துவின் பாடல் வரியான 'பொன்மாலை பொழுது' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் காயத்ரி ஹீரோயின். ஏ.சி.துரை என்பவர் இயக்கினார். ஆதவின் சகோதரியும், அம்மாவும் இணைந்து தயாரித்திருந்தார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இதன் பிறகு 'யாமிருக்க பயமே' என்ற பேய் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார்.
தற்போது தனது தாத்தாவின் பிறந்த நாளான நேற்று தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அடுத்து ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் படத்தின் பெயர் 'வதனமே சந்திரபிம்பமோ'. இது தியாகராஜ பாகவதரின் பாடல் வரி. ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. 'விசாரணை' படத்தில் நடித்த சந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதுதவிர பல முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சு நடந்து வருகிறது. அதுபற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். ஓம் சினிமா என்ற நிறுனம் தயாரிக்கிறது. சங்கர் டக்கர் என்பவர் இசை அமைக்கிறார், ஸ்ரீநிவாசன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.