'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அரண்மனை-2வில் அதிரடிப்பேயாக நடித்த த்ரிஷா, அதையடுத்து நடித்துள்ள இன்னொரு அதிரடிப்படம் தான் நாயகி. இந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அதோடு இந்த படம் காமெடி கதையில் உருவாகியிருக்கிறது என்று சொன்னபோதும், ஒரு கேரக்டரில் த்ரிஷா முதன்முறையாக அதிரடி அவதாரம் எடுத்துள்ளார்.
இதற்கு முன்பு அந்த அளவுக்கு ஆவேசமான காட்சிகளில் எந்த படத்திலும் நடித்திராதபோதும், இந்த காட்சியில் நடிக்க அதிக டேக் வாங்காமல் ஓரிரு ஷாட்டிலேயே ஓகே செய்து கொடுத்து விட்டாராம் த்ரிஷா. அதனால் இத்தனை நாளும் த்ரிஷா சாப்ட்டான வேடங்களில் பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவமாக இருக்கும் என்கிறார்கள். மேலும், தற்போது அப்படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில், தெலுங்கு டப்பிங் முடிந்து விட்ட நிலையில், தமிழ் டப்பிங் நடந்து வருகிறது. இந்த படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் வருகிற ரம்ஜான் தினத்தன்று நாயகி படத்தை வெளியிடுகிறதாம்.
அதோடு, த்ரிஷாவை மையமாக வைத்து வெளியாகியுள்ள இந்த படமும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறதாம்.