ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலக அளவில் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டில் உள்ள ‛ரெக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் ‛கபாலி படம் திரையிடப்பட உள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திரைப்படம் அந்தத் திரையரங்கில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. 2000-க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட அந்தத் திரையரங்கில் படம் வெளியாவதும், படம் பார்ப்பதும் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.
ஜுலை மாதம் 14ம் தேதியன்று படத்தின் பிரிமீயர் காட்சி அங்கு நடக்க உள்ளது. அந்தத் திரையரங்கில் ‛கபாலி படம் வெளியிடப்படுவதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்களுடைய டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்கள். அதில், “மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படம் ‛கபாலி, நடிகர் ரஜினிகாந்துடன் பிரீமியர் காட்சியில் 14 ஜுலை கலந்து கொள்ளுங்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பிரான்ஸில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள ரஜினி ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான செய்திதான்.
அன்றைய தினம் நடக்கும் காட்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. திரையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பற்றி ‛கபாலி படக் குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மேலும் விவரங்கள் தெரிய வரும்.
தமிழ்த் திரையுலகத்தை மேன் மேலும் உலக அளவிற்குக் கொண்டு செல்லும் படமாக ரஜினிகாந்தின் ‛கபாலி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.