பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மெகாஸ்டார் மம்முட்டி நடிப்பில் அதிரடி போலீஸ் படமாக உருவாகியுள்ளது 'கசாபா'. வரலட்சுமி சரத்குமார் முதன்முதலாக இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். வரும் ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக வெளியாக உள்ள இந்தப்படத்தின் டீசரை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட இருந்தார்கள்..
ஆனால் அதற்குமுன் யாரோ சிலரால் திருட்டுத்தனமாக இணையதளத்தில் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அப்படி வெளியிட்டவர்கள் ஒரிஜினல் டீசரில் இருந்த பி.ஜி.எம்மை மாற்றிவிட்டு தெலுங்குப்படத்தில் இருந்து சில காமெடியான பி.ஜி.எம்களை போட்டு டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த டீசரை பார்ப்பவர்கள் 'கசாபா' ஏதோ காமெடி படம் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் இது பக்கா ஆக்சன் படம். இந்த டீசர் லீக்கானதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தற்போது படக்குழுவினர் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்களாம்.