'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மிர்ச்சி, ஸ்ரீமந்துடு போன்ற சூப்பர்ஹிட் படங்களுக்கு பின்னர் இயக்குனர் கொரட்டாலா சிவா, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தை இயக்கி வருகின்றார். ஐ.ஐ.டி, மாணவன், கார் மெக்கானிக் என இரு தோற்றங்களில் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா என இரு நாயகிகள் நடிக்கின்றனர்.
நானாக்கு ப்ரேமதோ படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர், இப்படத்திற்கு ரூ 18 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் விநியோக உரிமைக்கான விற்பனை எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. ஆகஸ்ட் 12 திரைக்கு வரவுள்ள ஜனதா கேரேஜ் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றர்.