இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள் அளிக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: கடந்த, 2002 அக்டோபர், 13ம் தேதி, காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். பின், கவர்னரை சந்தித்து, மனு அளித்த ரஜினி, நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என, அறிவித்தார். அறிவித்து, 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கூட, அவர் இதுவரை அந்த நிதியை, மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ அளிக்கவில்லை. இப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் நதிநீர் இணைப்பு விஷயத்தில், முனைப்பாக செயல்படுகின்றனர். எனவே, ரஜினி அறிவித்தபடி, ஒரு கோடி ரூபாய் நிதியை உடனடியாக அளிக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம். ஒரு மாதத்துக்குள் கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.