இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குநர் மிலன் லூதிரா இயக்கவுள்ள படம் ‛பாத்சாகோ'. அஜய்தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, வித்யூத் ஜம்வால், இலியானா, இஷா குப்தா, சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். 1970களில் இந்தியாவில் எமர்ஜென்ஸி பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இப்படத்தின் கதை உருவாக இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் துவங்க இருப்பதாக படக்குழு உறுதிப்பட தெரிவித்திருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அதற்கு அடுத்தப்படியாக ராஜஸ்தானில் 2 மாதமும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். முன்னதாக இப்படத்தின் கதையை உருவாக்கும் முன்னர் சுமார் 3 மாதங்கள் இதுதொடர்பாக ஆராய்ச்சி செய்து கதையை உருவாக்கி உள்ளார் மிலன் லூதிரா. ‛பாத்சாகோ' படத்தை மிலன் லூதிராவுடன் இணைந்து பூஷண் குமாரும் தயாரிக்க உள்ளார்.