பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
சுசீந்திரன் கடைசியாய் இயக்கிய பாயும்புலி படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.அது மட்டுமல்ல அந்தப் படத்தை வாங்கியவர்கள் பெரிய அளவில் நஷ்டமடைந்தனர்.பாயும்புலி ஓடாததினாலோ என்னவோ சுசீந்திரனுக்கு அடுத்தப் படம் உடனடியாய் கமிட்டாகவில்லை. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருந்நதார் சுசீந்திரன்!அதற்கான பூர்வாங்கவேலைகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென் அந்தப் படத்தை ட்ராப் பண்ணிவிட்டார் உதயநிதி.எனவே உடனடியாய் விஷ்ணுவிஷாலை வைத்து அடுத்தப்படத்தை தொடங்கினார் சுசீந்திரன்.
”வெண்ணிலா கபடிக் குழு', 'ஜீவா' ஆகிய படங்களை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் விஷ்ணு விஷால். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கிய விஷ்ணுவிற்கு இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது!
தற்போது 'வீர தீர சூரன்', 'போடா, ஆண்டவனே என் பக்கம்', 'வீரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும்.'அச்சம் என்பது மடமையடா' ஹீரோயின் மஞ்சிமா மோகன் இந்தப்படத்தில் விஷ்ணுவிற்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்!.இப்படத்தில் பார்த்திபன் வில்லனாக நடிக்க இருக்கிறார்.