பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
'பெங்களூர் நாட்கள்' உட்பட ஆர்யா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததால் கடும் அப்செட்டில் இருக்கிறார்.எனவே தோல்வியிலிருந்து மீண்டு வரும் வெறியுடன் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடம்பை இரும்புபோல் மாற்றி தற்போது 'கடம்பன்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா.மஞ்சப்பை பட இயக்குநர் ராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் கேத்ரின் தெரஸா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
'கடம்பன்' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை தாய்லாந்தில் உள்ள காட்டில் படமாக்க உள்ளனர். இதற்காக தற்போது தாய்லாந்து சென்றுள்ளது கடம்பன் படக்குழு.தாய்லாந்து மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட்டும் பிரபல நடிகருமான டோனி ஜா நடிப்பில் 2008 ல் வெளிவந்த படம் - 'ஆங் பாக்' படத்தின் பார்ட் 2.
இந்தப் படத்தில் 100 க்கும் மேற்பட்ட யானைகளுக்கு மத்தியில், யானைகளின் மீது டோனி ஜா ஓடும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது.அதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.அந்த காட்சியின் இன்ஸ்பிரேஷனில் கடம்பன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை எடுக்க உள்ளனர்.50 க்கும் மேற்பட்ட யானைகளுக்கு மத்தியில் ஆர்யா பங்குபெறும் சண்டைக்காட்சி அது.இதற்காக யானைகளை எப்படி கையாள்வது என்பதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார் ஆர்யா.தாய்லாந்தில் உள்ள சியாங் மை என்ற இடத்தில் ஜூலை 1ஆம் தேதி இந்த க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம்.