பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்ப் படங்களுக்கு போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற முணுமுணுப்பு கோடம்பாக்கத்தில் பல வருடங்களாக கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதே சமயம், தமிழ்ப்படங்களுக்கு இணையாக அதிக தியேட்டர்களில் ஹாலிவுட் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு சமீபத்திய உதாரணங்களாக என்று இரண்டு படங்களை குறிப்பிடலாம். ஒன்று... சில வாரங்களுக்கு வெளியான தி ஜங்கிள் புக். இரண்டு.. அண்மையில் வெளியாகி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் கான்ஜுரிங் 2. இந்த இரண்டு படங்களுமே தமிழ்நாட்டில் மட்டுமே பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த வரிசையில் இப்போது இன்டிபென்டென்ஸ் டே படத்தின் 2ஆம் பாகமும் இடம்பெறவிருக்கிறது.
ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இன்டிபென்டென்ஸ் டே'. மிகப்பெரிய வசூலை அள்ளியது அந்தப் படம். தற்போது அதன் 2ஆம் பாகம் 'இன்டிபென்டஸ் டே : ரிசர்ஜென்ஸ்' வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கிறது.
200 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது இப்படம். பில் புல்மேன், ஜெஃப் கேல்டுப்ளம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இவற்றில் 80க்கும் மேற்பட்ட திரையரங்குளில் தமிழில் டப் செய்யப்பட்ட பதிப்பு வெளியாகவிருக்கிறது.