மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'றெக்க'. அவர் ஏற்கெனவே 'சேதுபதி' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ஆக்ஷன் பண்ணியிருந்தாலும் அதில் மனைவி குழந்தை என்ற பக்குவமான கேரக்டர். முதன் முறையாக விஜய், அஜீத் பாணியில் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் 'றெக்க'. ரத்ன சிவா இயக்குகிறார். லெட்சுமிமேனன் ஹீரோயின்.
கும்பகோணத்தை சேர்ந்தவர் விஜய் சேதுபதி, வக்கீலுக்கு படித்து விட்டு கோர்ட்டுக்கு சென்ற வாதாடாமல் உள்ளூரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். மதுரையில் இருக்கும் அமைச்சர் மகள் லட்சுமி மேனனை கும்கோணத்துக்கு கடத்தி வரும் அசைன்மெண்ட் கிடைக்கிறது. மதுரைக்கு கிளம்பிச் சென்று லட்சுமிமேனனை கடத்தி வருகிறார். இந்த அசைன்மெண்டில் வருகிற ரொமான்சும், ஆக்ஷனும்தான் கதை. விஜய்சேதுபதி ஆக்ஷன் காட்சிகளில் படு ஸ்டைலாக நடித்திருக்கிறார். லட்சுமிமேனன் மதுரை பெண்ணாக இருந்தாலும் அமைச்சர் மகள் என்பதால் அந்த கெத்தில் மார்டனாக இருப்பவர். கடத்தலுக்கான காரணம், கடத்தியவனுக்கும், கடத்தப்பட்டவளுக்கும் காதல் வருவது எப்படி. என்பது திரைக்கதை
ஹரீஷ் உத்தமன், கபீர் சிங் என இரண்டு வில்லன்கள், கிஷோர் அமைச்சராக நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் விஜய்சேதுபதியின் அப்பாவாக நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மதுரையில் நடந்து வருகிறது. தீபாவளி வெளியீடாக கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார்கள்.