இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முதன்முறையாக சிவகார்த்திகேயன் மெகா பட்ஜெட்டில் நடித்துள்ள படம் ரெமோ. இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராம், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல்பூக்குட்டி என பிரபல கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் பெண் வேடத்திலும் நடித்துள்ள சிவகார்த்திகேயன், அந்த கெட்டப்புக்காக தனது உடல எடையை குறைத்ததோடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். தனக்கு இந்த ரெமோ முக்கியமான படம் என்பதால் கடினமாக உழைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மேலும், தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருப்பதால், படத்திற்கான பப்ளிசிட்டிகளையும் ஒவ்வொன்றாக ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில், நேற்று முன்தினம் ரெமோ படத்தின் மேக்கிங் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இன்னொரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டீல் பாடல் ஜூன் 23-ந்தேதி அதாவது நாளை வெளியாகிறது. இதை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வெளியிடுகிறாராம்.