தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்திற்கு இதுவரை டைட்டீல் என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் பணியாற்றி வருபவர்களோ, விஜய்யின் 60வது படம் என்று சொல்லாமல், எங்க வீட்டுப்பிள்ளை என்றுதான் சொல்கிறார்கள். அதோடு அந்த படத்தில் எம்ஜிஆர் நடித்தது போலவே இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய். அதில் கிராமத்தில் வாழும் அப்பாவி விஜய் வில்லன்களிடம் சிக்கித்தவிக்க, நகரத்தில் இருந்து செல்லும் விஜய்தான் அவரை காப்பாற்றுவாராம். இப்படித்தான் கதை செல்வதாக சொல்கிறார்கள்.
அதேசமயம், இந்த எங்க வீட்டுப்பிள்ளை டைட்டீல் செய்தி மீடியாக்களில் கசிந்தபோது, விஜய்தரப்பில் இருந்து, அதற்கு மறுப்பு செய்தி வெளியானது. இந்த நிலையில், இன்று விஜய்யின் 43-வது பிறந்த நாளையொட்டி, நேற்று மாலையே சென்னையில் முக்கிய பகுதிகளில் விஜய்க்கு பிறந்த நாள் போஸ்டர் ஒட்டும் பணிகளில் அவரது ரசிகர் மன்றங்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தன. அப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில் இளையதளபதி விஜய் என்று வழக்கம்போல் அச்சிடாமல், உங்க வீட்டுப்பிள்ளை விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கொட்ட எழுத்தில் அச்சிட்டுள்ளனர்.