ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மனுநீதி, இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமைய்யா. மைனா படத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய பிறகு காமெடி, குணசித்ர வேடங்களில் அதிகமாக நடித்து வரும் அவர், சில படங்களில் லீடு ரோலிலும் நடித்து வருகிறார். அதோடு, எந்த படமாக இருந்தாலும் தான் நடிக்கும் கேரக்டர்கள் பேசப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தம்பி ராமைய்யா. அதன்காரணமாக ஸ்பாட்டில் டைரக்டர்கள் தனக்கான டயலாக் பேப்பரை கையில் கொடுத்ததும் அதை படித்து பார்ப்பவர். அதில் ஏதேனும் திருத்தம் செய்தால் இன்னும் சீன் மெருகேறும் என்று தோன்றினால் டைரக்டர் களை அணுகி அனுமதி கேட்கிறார்.
அதற்கு அவர்கள் ஓகே சொல்லி விட்டால், ஸ்பாட்டில் அமர்ந்தே தான் நடிக்க வேண்டிய சீனுக்கு தேவையான டயலாக்குகளை தனது சார்பில் சேர்த்து வெயிட்டான சீனாக மாற்றி விடுகிறார் தம்பி ராமைய்யா. அப்படி அவர் மாற்றும் காட்சிகள் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் வெயிட்டாகி விடுவதால், பெரும்பாலான டைரக்டர்கள் தம்பி ராமைய்யாவுக்கு காட்சிகளில் திருத்தம் செய்து கொள்ள பூரண சுதந்திரம் கொடுக்கத் தொடங்கி விட்டனர். இப்படி அவர் தன்னைத்தானே மெருகேற்றிக்கொள்ள ஸ்பாட்டிலேயே அமர்ந்து சின்களை டெவலப் செய்வதைப்பார்த்து, இமான் அண்ணாச்சி போன்ற சில நடிகர்களும் தங்களுக்கான காட்சிகளை டெவலப் பண்ணுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்