'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சிம்புவுடன் ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தவர்தான் திரிஷா. அப்படத்தில் அதிக நெருக்கம் காட்டியும் நடித்தார். இந்த நிலையில், திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்க அவரை அணுகியதாகவும், அம்மா வேடம் என்பதால் அவர் மறத்ததாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. ஆனால் இப்போது திரிஷாதரப்புக்கு நெருக்கமானவர்களிடம் அதுபற்றி விசாரித்தால் வேறு காரணம் சொல்கிறார்கள்.
அதாவது, சிம்பு படத்தில் நடிக்க அவரை அழைத்தபோது, ஓரளவு கதைகூட கேட்டார் திரிஷா. அதில் சில ஆபாச வசனங்கள இருந்தபோதும், இளைஞர் களுக்கான படம்தானே என்று அவர் அதை பெருதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் பெரும்பாலான காட்சிகளை அவரே ஆக்ரமித்துக்கொள்கிறாராம். திரிஷா ஸ்கோர் பண்ண பெரிதாக வாய்ப்பு இல்லையாம். சமீபகாலமாக நாயகி, மோகினி என்று லீடு ரோல்களில் நடித்து வரும் திரிஷா, இந்த நேரத்தில் குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றும் வேடத்தில் நடித்தால் மார்க்கெட் பாதிக்கும் என்றுதான் நைசாக நழுவிக்கொண்டதாக சொல்கிறார்கள்.