வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஆடையை குறைக்காமலேயே ரசிகர்களை கவரலாம் என்பதற்கு நான்தான் உதாரணம் என்று நடிகை அசின் கூறியுள்ளார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போய் ஓரளவு தாக்குப்பிடித்து நிற்பவர் நடிகை அசின். சல்மான்கானுடன் நடித்ததைத் தொடர்ந்து தற்போது அமிதாப், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தனது பாலிவுட் பயணம் குறித்து அசின் அளித்துள்ள பேட்டியொன்றில் ரொம்பவே பெருமிதப்பட்டிருக்கிறார்.
அவர் கூறுகையில், எனது இந்திப்படமான ரெடி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆடையைக் குறைக்காமலேயே என்னால் ரசிகர்களை கவர முடியும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்தப் படம். என்னைப்பற்றி தொடர்ந்து வதந்திகள் பரவுவதாகக் கூறுகிறார்கள். இதை நானே உருவாக்குவதாகவும் சிலர் எழுதியுள்ளனர். இந்தி திரையுலகில் இதெல்லாம் சகஜம் என்று எனக்குத் தெரியும். அதனால் எதையும் நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. இன்னொரு முக்கியமான விஷயம்... நான் படங்களில் தலையிட்டு ஹீரோவை மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகக் கூறுவது. நான் அப்படி ஒருபோதும் சொன்னதில்லை. அந்த நிலையிலும் இல்லை, என்றார்.
நீல்நிதின் முகேஷ்வுடனான காதலை எஸ்.எம்.எஸ். அனுப்பி நீங்கள் முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டபோது, அதுபற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. என்னைப் பற்றி இதுபோல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன, என்று கடுப்புடன் பதில் அளித்தார்.