ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் எனும் சூப்பர் ஹிட் திரைப்படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. ராம் சரண் ராகுல் பீரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கின்றார். இசையமைப்பாளர் ஹிபாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகின்றார்.
இப்படத்தில் ராம் சரணுடன் காஜல் அகர்வால் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு நடனமாடவிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் இதனை காஜல் அகர்வால் மறுத்துள்ளார். ராம் சரணுடன் குத்தாட்டம் போட துருவா படக்குழுவினர் யாரும் தன்னை அனுகவில்லை என கூறும் காஜல் அகர்வால், இத்தகவல் வெறும் வதந்தி என குறிப்பிட்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் துருவா படத்தை தயாரிக்கின்றார்.