விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
அமலாபால் திருமணத்திற்குப்பின் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார் என்றாலும் கூட இந்த வருடத்தில் தமிழில் 'பசங்க-2' மற்றும் மலையாளத்தில் '2 பெண்குட்டிகள்' என அவர் நடித்த இரண்டு படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இவற்றை தொடர்ந்து அமலாபால் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள 'அம்மா கணக்கு' மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஷாஜகானும் பரீக்குட்டியும்' என இன்னும் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தனுஷ் தயாரித்துள்ள 'அம்மா கணக்கு' படம் வரும் வெள்ளி (ஜுன்-24) அன்று வெளியாகவுள்ளது.. இந்தப்படத்தில் 15 வயது இளம்பெண்ணுக்கு அம்மாவாக நடித்துள்ளார் அமலாபால்.
அதேசமயம் மலையாளத்தில் 'ஷாஜகானும் பரீக்குட்டியும்' படம் ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக வரும் ஜூலை-6ஆம் தேதி வெளியாகிறது. போபன் சாமுவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா என இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் அமலாபால். படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது இது ஒரு முக்கோண இல்லையில்லை நாற்கோண காதல்கதையாக இருக்கலாம் என்றே தெரிகிறது. நடிப்பிலிருந்து ஒதுங்கிய நடிகை ஒருவரின் படங்கள் 11 நாட்கள் இடைவெளியில் ரிலீஸாவது ஆச்சர்யமான நிகழ்வுதான்.