வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
டேவிட் தவான் இயக்கத்தில் 1998-ம் ஆண்டு, அமிதாப், கோவிந்தா, ரவீணா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த காமெடிப்படமான ‛படே மியான் அண்ட் சோட்டே மியான்' ஹிட்டாக அமைந்தது. தற்போது இப்படத்தை ரீ-மேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனமும், தயாரிப்பாளர் வாசு பாக்நானியும் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருக்கின்றனர். இப்படத்தில் அமிதாப்-கோவிந்தா ரோலில் அக்ஷ்ய் குமார் மற்றும் சித்தார்த் மல்கோத்ராவை நடிக்க பேசி வருகின்றனர். மேலும் இயக்குநருக்கான தேர்வு பணியும் நடந்து வருகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் வாசு கூறுகையில், நீண்டநாட்களாகவே நானும், ஈராஸ் நிறுவனமும் ‛படே மியான் அண்ட் சோட்டே மியான்' படத்தை ரீ-மேக் செய்ய பேசி வந்தோம். தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது, விரைவில் படம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.