தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தில் அனிருத், சந்தோஷ் நாராயணனுக்கு முன்பாகவே இளமை துள்ளலுடன் கூடிய இசையை நுழைத்து தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தவர் யுவன்ஷங்கர் ராஜா. ஆனால், கடந்த சில வருடங்களாக அவருடைய திரையுலக வாழ்க்கை இறங்கு முகத்தில் இருந்தது, அதற்கு சில தனிப்பட்ட காரணங்களும் இருந்தன. யுவனுடன் இசையில் இனிமையான பாடல்களை வாங்கி தங்களுடைய படங்களை வெற்றிப் படங்களின் பட்டியலில் இணைத்து தங்களையும் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் கொண்டு போன இயக்குனர்கள் கூட யுவனை விட்டுப் பிரிந்தனர்.
இப்போது ஒவ்வொருவராக மீண்டும் யுவனுடன் இணைந்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் செல்வராகவன். 'காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை' ஆகிய படங்களில் தனி முத்திரை பதித்த யுவன் - செல்வராகவன் கூட்டணி அதற்குப் பின் பிரிந்தது. அந்த கூட்டணி தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மூலம் இணைந்துள்ளது. இப்படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் பதிவு செய்துவிட்டதாக யுவன் தெரிவித்துள்ளார்.
அடுத்து சிம்பு, யுவன் கூட்டணி. இருவரும் இணைந்த “மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம்” ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதன் பின் இந்த கூட்டணி இணைந்து எந்தப் படத்திலும் பணிபுரியவில்லை. சிம்பு நடித்து கடைசியாக வெளிவந்த 'இது நம்ம ஆளு' படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனாலும், சிம்பு தன்னுடைய அடுத்த படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு மீண்டும் யுவனுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கான பாடல்களை சிம்புவுடன் இணைந்து கம்போஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார் யுவன்.
அதோடு கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கும் யுவன்தான் இசையமைக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
யுவனின் இசையில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து படங்கள் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் 'தரமணி' படம் முதலில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.