இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இறைவி படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் படம் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை. சிறிய இடைவேளைக்குப்பிறகு இந்த படம் மூலம் மீண்டும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்துள்ளார் செல்வராகவன்.ஹாரர் கதையில் உருவாகும் இந்த படத்தில் ரெஜினா, நந்திதா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களில் ரெஜினாவுக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக அப்படக் குழுவினர் தகவல் தருகின்றனர்.காரணம் இந்த படத்தில் அவர்தான் பிரதான பேய் வேடத்தில் நடிக்கிறாராம்.
மேலும், இந்த படத்தில் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளார் செல்வராகவன். சிகப்பு கலரில் டிசைன் செய்யப்பட்டுள்ள அந்த போஸ்டரில் எஸ்.ஜே.சூர்யா கையில் கிதாருடன் நிற்கிறார். நெஞ்சம் மறப்பதில்லை என்ற டைட்டீலில் பதில் -என்பதை மட்டும் கருப்பு கலரில் காண்பித்து மற்ற எழுத்துக்களை வெள்ளை கலரில் காண்பித்துள்ளார். அதோடு, நேற்று மாலை 6 மணிக்கு இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட செல்வராகவன், இன்று மாலை, நாளை மாலை -என தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதாகவும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.