பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
2016ம் ஆண்டில் கடந்த வாரம் 17ம் தேதி வெளியான திரைப்படங்களுடன் சேர்த்து இதுவரை 101 படங்கள் வெளிவந்துள்ளன. வரும் 24ம் தேதி “அம்மா கணக்கு, மெட்ரோ, ராஜா மந்திரி” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இந்தப் படங்களையும் சேர்த்தால் 2016ம் ஆண்டின் அரையாண்டில் வெளியான படங்களின் எண்ணிக்கை 104ஐத் தொட்டுவிடும். இந்த ஆறு மாத காலத்தில் இவ்வளவு படங்கள் வெளிவந்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அதிகமான படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100 படங்கள் என்பது எண்ணிக்கையில் தாண்டினாலும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் படங்கள் உள்ளன. ஒரு மாதத்திற்கு இரண்டு படங்கள் வெற்றி பெறுவதே பெரிய விஷயமாக உள்ளது. இந்த ஆறு மாதத்தில் “ரஜினி முருகன், அரண்மனை 2, இறுதிச் சுற்று, விசாரணை, சேதுபதி, பிச்சைக்காரன், காதலும் கடந்து போகும், தோழா, தெறி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்,” ஆகிய படங்கள்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன.
ஜுலை மாதத்தில் வெளி வர உள்ள 'கபாலி' படம் மீதான எதிர்பார்ப்பு அந்தப் படத்தின் டீசர் வெளியானதிலிருந்தே அதிகமாக உள்ளது. 'கபாலி' படம் ஜுலை மாதம் 15ம் தேதி வெளியாவதாக சொல்லப்படுவதால், அதற்கு முன்னதாகவே ஜுலை 1ம் தேதியும், 8ம் தேதியும் பல படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். 'கபாலி' வெளியீட்டிற்குப் பிறகு எப்படியும் இரண்டு வாரங்களுக்குப் புதிய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை.
இனி வரும் மாதங்களிலாவது படங்களின் வெற்றி விகிதம் அதிகமாக இருக்குமா ?....