ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வருகிற ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் சைமா (SIIMA) விருதுகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இந்தவிழாவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ' படத்தின் சிங்கிள் வெளியிடவிருக்கிறார்கள். அதாவது, அனிருத் இசையமைத்த 'செஞ்சிட்டாளே...' என்ற பாடலை அங்கு வெளியிட உள்ளனர்.
இந்த விஷயத்தை வைத்து ரெமோவுக்கு சமூகவலைத்தளங்களில் பில்ட்அப் கொடுக்க ஆட்களை தயார்படுத்தி வைத்திருந்தனர். செஞ்சிட்டாளே பாடல் வெளியாகும் தினத்தில் எவ்வாறு ட்வீட் செய்ய வேண்டும் என்று பல்வேறு டிசைன்களை உருவாக்கி வைத்திருந்தனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தரப்பை அப்செட்டாக்கும்வகையில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அதாவது, 'ரெமோ' படத்தின் சிங்கிள் டிராக் வெளியிடப்பட உள்ள அதே சைமா விழாவில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் முதலானோர் நடிக்கும் 'இருமுகன்' படத்தின் டீஸரையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த தகவலை 'இருமுகன்' படத் தயாரிப்பாளர் ஷிபு தமீன் தெரிவித்துள்ளார். சைமா விழாவில் ரெமோவுக்கு போட்டியாக 'இருமுகன்' இடம்பெறுவதை சிவகார்த்திகேயன் தரப்பு விரும்பவில்லையாம். எனவே சைமா நிர்வாகிகளிடம் தங்களின் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தகவல்.